திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, கட்சியின் அமைப்பு செயலாளரும்,திருவாரூர் மாவட்டசெயலாளருமான முன்னாள்உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ் எம் எல் ஏ ஆலோசனைக்கு இணங்க,அஇஅதிமுக உறுப்பினர் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் லாயம் 1-வது வார்டு,கோயில்பத்து 14 வது வார்டு ஆகிய இடங்களில் பேரூர் செயலாளர் சா. குணசேகரன்,பேரூர் அவைத் தலைவர் ரத்தினகுமார்,வார்டு செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் லாயம் ராமச்சந்திரன், குமார், முன்னாள் வார்டு கவுன்சிலர் மாரியம்மாள் குமார் அதேபோன்று கோவில்பத்து வார்டு செயலாளர் மகாலிங்கம், நகரக் கழக இணை செயலாளர் புஷ்பா மகாலிங்கம்,கிருஷ்ணமூர்த்தி, மகாலட்சுமி மற்றும் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.