போடிநாயக்கனூரில் தமிழக வெற்றிக்கழக கட்சி கொடி அறிமுகமானதை அடுத்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கோலாகல கொண்டாட்டம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் இதய பகுதியான தேவர் சிலை ரவுண்டானா அருகில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சி கொடி அறிமுகம்
செய்யப்பட்டதை தொடர்ந்து போடி நகர விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கோலாகலமாக கொண்டாடினார்கள்
தமிழகமே எதிர்நோக்கி இருந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக முன்னேற்றம் சார்பாக கட்சிக்கொடியை கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் விஜய் சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார் அந்த கொடியில் வெற்றியின் சின்னமான வாகை மலரும் போர்க்குணம் நிறைந்த இரு யானைகள் அடங்கிய மஞ்சள் மற்றும் சிகப்பு நிற கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக கட்சி தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் நகரின் பிரதான வீதிகளிலும் பஸ் நிலையத்திலும் அங்குள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி மகிழ்தனர் மேலும் கட்சிக்கொடி அடங்கிய பிளக்ஸ் ஏந்தி கட்சிக்கொடி அறிமுக விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடினர் நமது அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது இதனால் கேரளாவின் முக்கிய அடையாளமான யானை சின்னம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இரு மாநிலத்திலும் தமிழக வெற்றி கழகம் கட்சி பிரபலம் அடையும் என்றும் ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.