சேலம்-எடப்பாடி-
செய்தியாளர் : மணிகண்டன்
7810093770…
எடப்பாடியில் ஆரோக்கியமான வாழ்வு குறித்து பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி…
சேலம் மாவட்டம் எடப்பாடி ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு கியோகுஷின் சின்னு’ஸ் கராத்தே சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை அதிமுக நகர மன்ற எதிர்க்கட் தலைவர் முருகன் கொடி அசைத்து வைத்து தொடங்கி வைத்தார்…
விழிப்புணர்வு பேரணையானது எடப்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டு கேட்டுக்கடை பகுதியில் உள்ள யுனிவர்சல் பள்ளியில் முடிவடைந்தது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று விழிப்புணர்வு செய்தனர். இதில் எடப்பாடி ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்…