கீழ்கொடுங்கலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்கலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை பள்ளியின் மேலாண்மை குழுவில் இணைத்து, அவர்களின் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் .தேவதாஸ் (பொ) தலைமை தாங்கினார். மேலிடப் பார்வையாளராக வேங்கட லட்சுமி BRC பங்கேற்றார், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு SMC கட்டமைப்பினை தேர்வு செய்தனர்.
தேர்வில் எஸ்.பரிமளா சேகர் தலைவராகவும், பன்னீர்செல்வம் துணைத் தலைவராகவும், இவர்களுடன் சேர்த்து 24 உறுப்பினர்கள் ஏக மனதாக தேர்வு செய்தனர். இறுதியாக பிரபு முதுகலை ஆசிரியர் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.