தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு தொழுவந்தாங்கல் கிராமத்தில் 200 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கி மிகச் சிறப்பான முறையில் கொண்டாடினார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தேமுதிக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான, மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாள் இன்று ஆகஸ்ட் 25 தமிழகம் முழுவதும் அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் வறுமை ஒழிப்பு தினமாக ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர்,

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்து,

அதில் நின்று வென்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார்,அவர் இந்த தொகுதியில் பல்வேறு கிராமங்களில் சாலை வசதிகள், மின்விளக்குகள், சிறுசிறு பாலங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அங்கன்வாடி கட்டிடங்கள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தந்தாலும்,அதில் குறிப்பாக 50 வருட கோரிக்கையான மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் மத்திய அரசிடம் போராடி ரூபாய் 22 கோடி மதிப்பில் கட்டிக் கொடுத்தார்

என்பது வரலாறு, மேலும் மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே உயிரிழந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி,வாணாபுரம் வட்டம் தொழுவந்தாங்கள் கிராமத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக துணை செயலாளர் T.K.கோவிந்தன் ஏற்பாட்டில் 50 அடி உயரமுள்ள கம்பத்தில் தேமுதிக கொடியை ஏற்றிவைத்தும், கேப்டன் விஜயகாந்த் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தும்,லட்டு ஜாங்கிரி,கேசரி உள்ளிட்ட இனிப்புகள் வழங்கியும்,மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா,பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கியும்,அது மட்டும் இல்லாமல் 200 பேருக்கு தென்னகன்றுகள் வழங்கியும்,ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி மகிழ்ந்தனர்,மேலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக தேமுதிகவின் பொது செயலாளர் தன்னகத்தில் ஜான்சர் ராணி அண்ணியார் அவர்களை தமிழகத்தின் முதல்வராக அமர்த்துவது எங்களின் லட்சியம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்,இந்த நிகழ்வில் ரிஷிவந்தியம் மத்திய ஒன்றிய செயலாளர் A.கோதண்டபாணி, தேமுதிக நிர்வாகிகள் கண்ணுப்பிள்ளை அண்ணாமலை இளையராஜா விஜயகாந்த் அன்பு ராமமூர்த்தி உத்திராடம், சக்கரவர்த்தி, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *