மதுரை மாவட்ட இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அளவில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கைகள் நிறைவேறாத காரணத்தால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டங்களை திட்டமிட்டு முதற்கட்டமாக சுவரொட்டி இயக்கம் நடத்த உள்ளோம்.
கள்ளர் சீரமைப்புத்துறை ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதிர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விண்ணப்பிக்கும் நிகழ்வில் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக கண்காணிப்பாளர் ஜீவா மற்றும் முன்னாள் கணக்கு அலுவலர் அசோக் குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடமும் மற்றும் ஓய்வூதியர்களிடமும் அலைபேசியிலும், அலுவலகத்திற்கு வரவழைத்து நேரிலும் வழிப்பறி செய்வது போன்று கையூட்டு கேட்டதை துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய முறையில் விசாரணை நடைபெறும் போது விசாரணையில் ஆவணங்களை முன்னிலைப்படுத்த இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தயாராக உள்ளது.
மேலும், துறை மாறுதல் அரசாணை எண்: 73ஐ ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் வெளிப்படை தன்மையுடன் அமல்படுத்த வேண்டும். நடப்பாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை கள்ளர் சீரமைப்புத் துறையில் உடனடி யாக நடத்த வேண்டும். ஆசிரியர்களின் பணிவரன் முறை, தகுதிகாண் பருவம், தேர்வுநிலை, சிறப்பு நிலை விண்ணப்பங்களின் மீது உரிய காலத்தில் நடவடிக்கை வேண்டும். ஐந்து ஆண்டுகளாக கள்ளர் சீரமைப்புத் துறையில் காலியாக உள்ள கல்வி அலுவலர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள இணை இயக்குநரின் நேர் முக உதவியாளர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். கள்ளர் சீரமைப்புத்துறை ல் பெரும்பான்மை பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் இல்லாத தகுதி வாய்ந்த பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை உருவாக்கி உடனடியாக நிரப்ப வேண்டும். கள்ளர் சீரமைப்பு துறையில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் உரிய விதிகளின் படி ஒன்பது முதுகலை ஆசிரியர்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் போராட்ட நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் தொடரும் என
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்பாண்டி , இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மதுரை
மாவட்ட நிதி காப்பாளர் சீனிவாசன்
ஆகியோர் தெரிவித்துள்ளனர்.