பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயில் தேர் மற்றும் தீ மிதி திருவிழா நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி காப்புகட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. நேற்று காலை திருக்கல்யாணம், பொங்கல் பூஜையும் நடைபெற்றது.தொடர்ந்து மாலை 4-மணியளவில் திருத்தேர் வடம் பிடித்து கோவிலைச் சுற்றி வந்து நிலையை அடைந்தது.
பின்பு 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள்.
இந்த தேர் விழாவில் 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பணிகளை மங்களமேடு டிஎஸ்பி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா கருப்பையா, கோவில் முக்கியஸ்தர்கள், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி செல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கீழப்புலியூர் நடராஜன், கரைக்காரர் ஜெகதீசன்,ராமஜெயம், ஜூன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.