தேனி மாவட்டம் கம்பம் மெயின் ரோட்டில் புதிதாக அமைந்துள்ள பவித்ரா கோல்ட் நிறுவனத்தை
தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி வணிக நிறுவனத்தை திறந்து வைத்தார்கள் இந்த திறப்பு விழாவில்
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்

கம்பம் நகரின் இதய பகுதியான சிக்னல் அருகில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பவித்ரா கோல்டு நகைக்கடையை தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி வணிக நிறுவனத்தை திறந்து வைத்தனர்.
கேரள மாநிலம் கட்டப்பனையை தலைமை இடமாகக் கொண்டு கேரளா மாநிலம் முழுவதும் பல்வேறு பிரதான ஊர்களில் கிளைகளை கொண்ட மிகவும் பிரபலமான நகைக்கடை வணிக நிறுவனம் பவித்ரா கோல்ட் இந்த மிகப்பெரிய நிறுவனத்தாரின் புதிய கிளை கம்பம் சிக்னல் அருகே ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் குக் வித் கோமாளி குரைஷி மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பவித்ரா கோல்ட் வழங்கும் கிப்ட் கூப்பன் வவுச்சர் மூலம் குலுக்கல் முறையில் 10 அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பவித்ரா கோல்டு நகைக்கடை நிர்வாக பங்குதாரர்கள் சன்னி பிரான்சிஸ், சென்ஸ் குரியன், ஷ்யாம் குரியன் மற்றும் ஜோஸ் கே. சி ஆகியோர்கள் தங்க நாணயம் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கம்பம் நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் முன்னாள் எம்எல்ஏ ஓ.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர் வாவேர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஜைனுல் ஆபிதீன், மதிமுக மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ரிலாடெக்ஸ் பசீர் அஹ்மது தாஜ் எலக்ட்ரிக்கல் அதிபர் அகமது ஷரீப் மற்றும் நிர்வாக பங்குதாரர்கள் பலர் உடன் இருந்தனர்.
பவித்ரா கோல்டு நிர்வாக பங்குதாரர்கள் கூறும் பொழுது, எங்களது பவித்ரா கோல்டில் நகை எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்படும். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்றனர்.
திறப்பு விழா சலுகையாக நேற்று தங்கம் வாங்கிய அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கி கௌரவித்தனர் மேலும் திறப்பு விழாவில் பங்கேற்ற அனைவரையும் பவித்ரா கோல்ட் பங்குதாரர்கள் சன்னி பிரான்சிஸ் சென்ஸ் குரியன் ஷியாம் குரியன் ஜோசப் கேசி ஆகியோர் அனைவரையும் வரவேற்று கனிவுடன் உபசரித்தனர்.