பெரம்பலூர் மாவட்டத்தில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் மாநில நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூர் நான்கு ரோடு செல்லும் வழியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் வெங்கட்ராகவன் ஜி தலைமை வகித்தார், மாநில பொது செயலாளர் சங்கர், மாநிலதுணைத் தலைவர் மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அகில பாரத துணை அமைப்பு செயலாளர் கணேஷ் மிஸ்ரா ஜி, தென் பாரத துணை அமைப்பு செயலாளர் ராஜீவன் ஜி, தமிழ் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் ஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் .
மேலும் இக்கூட்டத்தில் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏ.கே.செந்தில்குமார்,மாவட்டத் தலைவர் சிவராஜ்,மாநில துணைத்தலைவர் மணிவேல்,மாவட்ட செயல் தலைவர் சிவம் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் அமுதா கர்ணன், மற்றும் மாவட்ட துணை தலைவர்கள்,தமிழரசன் குழந்தைவேல்.துணை செயலாளர் ஆர். கோவிந்தராஜ், தமிழரசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டது.