தூத்துக்குடி அருகே உள்ள கீழ கூட்டுடன் காடு கிராமம் மேல தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் கருப்பசாமி (59), இவர் தூத்துக்குடியில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23ஆம் தேதி வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக தூத்துக்குடி மூன்றாவது மைல் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பஸ்ஸில் ஏற முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை