திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு வேம்படி ஸ்ரீசீதளா தேவி மாரியம்மன் மகா மாரியம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் ஆவணி மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை குத்துவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதேபோன்று இந்த ஆண்டு கடந்த 18-ஆம் தேதி ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு மதியம் 108 லிட்டர் பாலபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது,
அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாரதரணையும் நடைபெற்றது. அதேபோன்று ஆவணி இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு மதியம் சிறப்பு பாலபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாலை அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது, இது நூற்றுக்கணக்கான தாய்மார்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கு அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ்,தக்கார்/ஆய்வர் க. மும்மூர்த்தி, வலங்கைமான் செட்டித் தெருவாசிகள்,ஸ்ரீ சீதளா தேவி இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.