கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக இன்று காலையில் சென்றுள்ளனர் இந்நிலையில் கிணற்றின் அருகே இருந்த கட்டிடத்தின் மீதிருந்து கிணற் நிற்குள் ஒன்றன் பின் ஒன்றாக குதித்துள்ளனர்
இதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் மூர்ச்சையாகி ஆழமான பகுதிக்குச் சென்ற ஆகாஷ் மற்றும் ஜான் ஆகி இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த தீயனைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த சிறுவர்களின் சடலங்களை கைப்பற்றி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள திறந்தநிலை கிணற்றை மூட வேண்டும் இல்லையேல் சுவரினை எழுப்பி பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்