அன்னை தெரேசா அவர்களின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறந்த சமூக பணிக்கான விருது பெண் காவலர் ஹேமமாலினிக்கு முதல்வர் வழங்கி பாராட்டு

தன்னம்பிக்கை பொம்மலாட்டம் கலை குழு நிறுவனர் திருமதி எலிசபெத் ராணி ஏற்பாட்டில் திருமதி தமிழரசி பிணி யற்றோரை காக்கும் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் அவர்களும் தற்காப்பு கலைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்றுவித்து மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி, தைரியத்தையும வீரத்தையும் விளைத்த பெண் காவலர் ஹேமமாலினி அவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி சிறந்த சமூகப் பணிக்கான விருதை வழங்கி வாழ்த்தினார்.
நன்றியுடன் விருதை பெற்று பெற்றுக்கொண்ட பெண் காவலர் ஹேமமாலினி முதல்வர் ரங்கசாமி அவர்களிடம் ஆசியும் பெற்றார். அதனைத் தொடர்ந்து வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமாரிடமும் விருதை காண்பித்து ஆசி பெற்றார்.