அஇஅதிமுக காஞ்சிபுரம் மாவட்ட கழகம், ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றியம் சார்பில் குண்ணம், சேந்தமங்கலம்,திருமங்கலம்,மொளச்சூர், பிச்சிவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் அதிமுகவின் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மாவட்ட பிரதிநிதியும் சேந்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவருமான
சார்லஸ் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.
இவ் விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சரும்,மாவட்ட கழக செயலாளருமான வி.சோமசுந்தரம் பங்கேற்று உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி, உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.