கோவை
தென்னிந்திய அளவிலான கிரிக்கெட் போட்டி – வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய இந்திய கிரிக்கெட் வீரர் , கோவை மாநகர காவல் துணை ஆணையர்….
கோவையில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற சூப்பர் ஒவர் எனும் ஆறு பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டி தொடரில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20 அணி வீரர்கள் பங்கேற்று அதிரடி காட்டினர்…..
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் வகையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் மைதானத்தில் அறம் பவுண்டேஷன் மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் ஐஸ்வரியம் பைனான்சியல் சர்வீஸ் கோப்பைக்கான தென்னிந்திய அளவிலான சூப்பர் ஓவர் (6 பந்து) கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 20 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் பந்து வீசும் அணியில் 8 பீல்டர்கள் களத்தில் இருப்பார்கள்.அதேபோல் பேட்டிங் செய்யும் அணியில் 6 பந்துக்கு 3 விக்கெட்டுகள் வரை விளையாடலாம் என விதிகள் விதிக்கப்பட்டது.
சூப்பர் ஓவர் என்பதால் இந்த போட்டியானது லீக், அரையிறுதி, இறுதிப்போட்டி என மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த நிலையில் அரையிறுதிக்கு சென்னை கிங்ஸ், டிக்னடிரிஸ்,கொச்சி கொம்பன், ஜென் சிசி ஆகிய அணிகள் தகுதி பெற்றன.பின்னர் நடைபெற்ற
இறுதிப்போட்டியில் சென்னை கிங்ஸ் அணியும், ஜென் சிசி அணியும் மோதின.
அதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட ஒரு ஓவரில் 16 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜென் சிசி அணி களம் இறங்கி 5 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை கிங்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்டாலின் ஆகியோர் பரிசுக்கோப்பைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்..