தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் தூத்துக்குடி மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட கேரிப்பை பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று பலமுறை அறிவுறுத்தி வருகிறார்
ஆனால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரிப்பை மொத்தமாகவும் சில்லறையாகவும் படு ஜோராக விற்பனை நடைபெறுகிறது பெரிய கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்கும்போது கூட கேரிப்பையில் தான் போட்டு பொருட்களை கொடுக்கிறார்கள் அதுபோல பிளாஸ்டிக் கப் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது மேலும் புகையிலை சர்வ சாதாரணமாக விற்பனை நடைபெறுகிறது
தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றனர் ஒரு சில மாநகராட்சி அதிகாரிகள் விற்பனைக்கு உடந்தையாகவும் உள்ளனர் மாநகராட்சி அலுவலகம் உள்ள பகுதியை சுற்றி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை ஆகையால் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பை புகையிலை பிளாஸ்டிக் அப் தூத்துக்குடி மாநகர் முழுவதும் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவே உள்ளது