செய்தியாளர் ச. முருகவேலு புதுச்சேரி
புரட்சி பாரத கட்சியின் நிறுவன தலைவரும் தமிழக காவல்துறையில்பட்டியலினத்தவர் சேர்வதற்கு 168 சென்டிமீட்டர் ஆக இருந்த உயரத்தை 165 சென்டிமீட்டர் ஆக குறைத்துஅரசு கெஜட்டில் வெளியிட காரணமானவரும் மண்ணுரிமை போராளியுமான டாக்டர் பூவை எம் மூர்த்தியார் அவர்களின் 22 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

கரியமாணிக்கம் மந்தைவெளி பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் டாக்டர் பூவை மூர்த்தியார் உருவப்படத்திற்கு கட்சியின் புதுவை மாநில துணை செயலாளர் நாகராஜன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பெண்களுக்கு இலவச சேலைகளும் ஏழை மக்களுக்கு அன்னதானமும் வழங்கினார். மாவட்ட துணை செயலாளர் அருள்பிரகாஷ், தொகுதி செயலாளர் நாவப்பன், தொகுதி பொருளாளர் அய்யனார், இளைஞர் அணி செயளாலர் தேவநாதன் உட்பட திரளாக பலர் கலந்து கொண்டனர்