தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், செப்- 5. தஞ்சை மாநகர கரந்தை பகுதி தி.மு.கழகம், மத்திய மாவட்டம் சார்பில் பகுதி கழக பொது உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூட்டம் வடக்கு வீதி தனியார் திருமண மண்டபத்தில் அவை தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கரந்தை பகுதி கழக செயலாளர் கார்த்திகேயன் வரவேற்பு உரையாற்றினார்.
தஞ்சை மாநகர கழக செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன், தஞ்சாவூர் எம்எல்ஏ டி கே ஜி நீலமேகம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, மாவட்ட அவைத் தலைவர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாநில மருத்துவர் அணி து.செயலாளர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வைத்து கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்களுக்கு செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழா, செப்டம்பர் 16 திமுக கழகத்தின் பவள விழா, செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாள் விழா ஆகிய மூன்று விழாக்களையும் சிறப்பாக கொண்டாட ஆலோசனைகளை வழங்கினார்கள்.
பின்னர் முப்பெரும் விழாசிறப்புரையாற்றிய முன்னாள் நிதித்துறை இணை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ் எஸ் பழநிமாணிக்கம் பேசும்போது கழகத் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தான் தஞ்சையில் காங்கிரஸ்காரர்களை வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வைத்தார். முன்பெல்லாம் காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் ஒரு ஊருக்கு சென்று வாக்கு சேகரிக்க சென்றாள் கோவில் அல்லது பொது சாவடிகளிலோ ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு ஊர் பெரியவர்களை அழைத்து வாக்கு சேகரிப்பதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் தலைவர் கலைஞர் அதை முறியடித்து கிராமம் கிராமமாக மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார் அதை கண்ட காங்கிரஸ் தலைவர்கள் அவர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆகையால் நமது கழக தொண்டர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கருத்தில் கொண்டு கழகத்தின் சிறப்பு செயல்பாடுகளை மக்களை நேரடியாக வீடுதோறும் சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்று பேசினார். சிறப்பு தீர்மானமாக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என்று கட்சி தலைமையை முதலமைச்சரை கேட்டுக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.