கப்பலோட்டிய தமிழன்,இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 153 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ.உ சி எழுச்சி பேரவை சார்பில் தாயுமானவர் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமையில் காலை உணவு வழங்கினர்.
பின்னர் கல்லூரி சாலை ராஜீவ்காந்தி சிலை அருகே வ.உ.சிதம்பரனாரின் உருவப் படத்திற்கு வ.உ.சி எழுச்சி பேரவை நிறுவனர் சரவணன் ஏற்பாட்டில் பேரவை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில்,செயலாளர் முத்துக்குமார்,பொருளாள்ர் விஜயன் முன்னிலையில் அனைத்து கட்சியினர்,பொதுமக்கள் மலர்தூவி வணங்கினர்.
இதில் மாங்குடி எம்.எல்.ஏ,முன்னாள் அமைச்சர் தென்னவன்,மேயர் முத்துதுரை,துணை மேயர் குணசேகரன்,முன்னாள் நகர்மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ,அ.தி.மு.க நகர செயலாளர் மெய்யப்பன்,காங்கிரஸ் நகர தலைவர் பாண்டி,நகர செயலாளர்கள் குமரேசன்,முகேஷ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ்,நகர வர்த்தக காங் தலைவர் ஜெயப்பிரகாஷ்,உஞ்சனை ஊராட்சி மன்ற தலைவர் அருணகீதன்,மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் கமல்ராஜா,வ.உ.சி எழுச்சி பேரவை நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர் தெய்வானை,தமிழ்மணி,மகேஷ்,பொறியாளர் பிரபாகரன்,நிர்மல்ராஜ்,வெங்கடேஷ்,காரைக்குடி மாமன்ற உறுப்பினர்கள்,வட்டார வெள்ளாளர் சங்க நிர்வாகிகள்,வ.உ.சி அறக்கட்டளை நிர்வாகிகள்,செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட அனைத்து கட்சியினர்,பொதுமக்கள் மலர்தூவி வணங்கினர்.காரை பாலா நன்றியுரை ஆற்றினார்.