திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக வ. உ. சிதம்பரநாதர்153 வது பிறந்தநாள் விழா,டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா, அன்னை தெரசா நினைவு தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன்திருவாரூர் மாவட்ட தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் தலைமை வகித்தார், மூத்த முன்னோடி நாடிமுத்து, கேமரா தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் வலங்கைமான் நகர காங்கிரஸ் தலைவர் கலியமூர்த்தி வ. உ. சி யின் வரலாற்றை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அன்னை தெரசாவுக்கு அனைவரும் நினைவு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.