தாராபுரம் அருகே உள்ள குண்டடம் –
ருத்ராவதி அருள்மிகு ஸ்ரீ ருத்ரவிநாயகர், திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களின் புனராவர்த்தன,அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே‌ உள்ள குண்டடம்-ருத்ராவதி அருள்மிகு ஸ்ரீ ருத்ரவிநாயகர், திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களின் புனராவர்த்தன,அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

400,ஆண்டுகள் பழமையான வரலாற்று புகழ் பெற்ற ருத்ர மகாராஜா காலத்து திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் புனராவர்த்தன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியுடன்

கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தானம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு முதலில் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் கும்பாபிஷேகம் அதன் பிறகு.ருத்ரவிநாயகருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மஹா மாரியம்மன் விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் ராமேஸ்வரம் கங்கை காசி ஆகிய பகுதியில் இருந்து கொண்டு வந்த புனித நீரை கும்பாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்டது இதைத்தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீர்த்தம் மோட்டார் மூலம் பொதுமக்கள் மேல் தெளிக்கப்பட்டது. குண்டடம் -ருத்ராவதி பொடாரம்பாளையம், புதூர்,கத்தகனனி, செங்களி பாளையம்,,கரிக்காட்டுபுதூர்.மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக திரண்டு வந்து மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் சண்கசுந்தரசிவம்.தினேஷ்சிவம். சுப்பிரமணிய சிவம் முத்துக்குமார சிவம். கொங்கு வடுகநாதர் சுவாமி மற்றும் இரகாம்பட்டி நாகேஸ்வர சுவாமி ஆலய அட்சர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள்
ஆகியோர் விழா விற்கான எற்பாடு களை செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *