விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுதந்திரா புரத்தில் இந்து இளைஞர் முன்னணி சார்பாக பிரம்மாண்ட விநாயகர் சிலை நிறுவப்பட்டது.
இதை அடுத்து அதிகாலை கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஆராதனைகள் அலங்கரிக்கப்பட்டவிநாயகருக்கு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்டசெயலாளர் சதீஷ்குமார், நகரத் தலைவர் காளியப்பன், நகரப் பொதுச் செயலாளர் முருகேசன், இந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், இந்து முன்னணி முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
