மூக்கையாத்தேவர் சிலைக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவி ஹசினா சையது மாலை அணிவித்து மரியாதை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பகுதியில் மகளிர்க்கான 33 சதவீத இட ஒதுக்கீடை அமல்படுத்த கோரி மகளிா காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம் மதுரை தெற்கு மாவட்ட மகளிா காங்கிரஸ் தலைவர் பிரவீனா ரஞ்சித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
இந்த ஊர்வலம் மதுரை மெயின் சாலையில் தொடங்கி நகா் மைய பகுதி வழியாக பேரையூர் ரோடு வரை மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் ஹசினா சையத் முன்னிலையில் கண்டன கோஷங்களுடன் ஊர்வலம் நடைபெற்றது .
இதற்கிடையே முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மூக்கையாத்தேவர் சிலைக்கு
காங்கிரஸ் மாநிலத் தலைவி ஹசினா சையது மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு இலவச நலதிட்ட உதவிகள் செய்தனா்.