மதுரை புதுஜெயில் ரோடு மில் காலனி வரசித்தி சக்தி இரட்டை விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மில்காலனியில் நடந்த சதுர்த்தி விழாவில் சங்கத்தலைவர் முத்துக்குமார் வரவேற்று பேசினார்.
செயலாளர் ஷியாம்சுந்தர், இணைச்செயலாளர் மல்லிகா, சங்கரகோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் ராஜசேகரன், செயலாளர் நித்தியானந்தம், பொருளாளர் ஏஞ்சல் தவச்செல்வி,அனிதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் கமிட்டி உறுப்பினர்கள் வைஜெயந்தி, கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சங்கத்தலைவர் முத்துக்குமார் நன்றி கூறினார்.