தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்க்கு ஒன்றிய திமுக பொது நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 3.30 மணிக்கு பையர்நத்தத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு மேற்க்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மேற்க்கு மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் பழனியப்பன், தர்மபுரி எம்.பி. மணி, மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பளர் சத்தியமூர்த்தி, உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட ஒன்றிய,கிளை நிர்வாகிகள் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிடம் திமுக கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் அதற்காக அனைத்து நிர்வாகிகளும் பாடுபட வேண்டும் என தீர்மாணிக்கப்பட்டது.
இதே போல் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் வெங்கடசமுத்திரத்தில் விநாயக மண்டபத்தில் இன்று மாலை. 5.30 மணிக்கு நடைபெற்ற கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார் தலமையில் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் கட்சி வளர்ச்சி. இளைஞரணி சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது.