கோவை நேரு நகர் பகுதியில் (First Cry Intellitots pre School and Day care) ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் எனும் ப்ரீ ஸ்கூல் மற்றும் டே கேர் துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..

குழந்தைகளின் கல்வி மற்றும் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் மற்றும் டே கேர் கோவை நேரு நகர் பகுதியில் துவங்கப்பட்டது.

நேரு நகர் சுபதர்ஷன் நகர் பகுதியில் துவங்கப்பட்ட இதற்கான துவக்க விழா நிர்வாக அறங்காவலர்கள் கிறிஸ்டோபர் பால் மற்றும் ஏஞ்சலினா கிறிஸ்டோபர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு வந்த அனைவரையும் திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகியும் முனைவர் கிறிஸ்டோபரின் தகப்பனாரும் ஆன ஜோ.ஆனந்தராஜ் வரவேற்று பேசினார்..

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தி.மு.க.கோவை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்,தெற்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி,
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி,முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன்,மாமன்ற உறுப்பினர்கள் பொன்னுசாமி,
கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய ஆரம்ப பள்ளி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக உடுமலைப்பேட்டை டி.சி.சி.தலைவர் ஆயர் செல்வராஜ்,ஈரோடு வள்ளி மருத்துவமனை தலைவர் மருத்துவர் டி.கே.சாமி,எஸ்.என்.எஸ்.தொழில் நுட்ப கல்லூரியின் டீன் முனைவர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்..

விஜய தசமி முதல் சேர்க்கை நடைபெற உள்ள இந்த குழந்தைளுக்கான பள்ளியில் டோட்லர்,நர்சரி மற்றும் எல்.கே.ஜி யு.கே.ஜி.வகுப்புகளை தேர்ந்த அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியுடன் பல்வேறு கூடுதல் திறன்கள் மற்றும் விளையாட்டு ஆர்வங்களை ஊக்குவிக்க இருப்பதாகவும்,

அது மட்டுமின்றி வேலைக்கு செல்பவர்கள் தங்களது குழந்தைகளை இங்கு சேர்த்து செல்வதால் குழந்தைகளை நல்ல முறையில் பராமரிக்கும் அனைத்து வசதிகளும் இங்கு இருப்பதாக நிர்வாக அறங்காவலர்கள் முனைவர் கிறிஸ்டோபர் மற்றும் ஏஞ்சலினா ஆகியோர் தெரிவித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *