தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விஸ்வரூப விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு தஞ்சை மாநகரில் பாஜக விஸ்வரூப விநாயகர் கமிட்டி சார்பில் 75 இடங்களில் விஸ்வரூப விநாயகர் சிலைகள் வைத்து நேற்று பூஜை செய்யப்பட்டது. தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட விஸ்வரூப விநாயகருக்கு பூஜை செய்தனர்.
நிகழ்ச்சிக்கு விஸ்வரூப விநாயகர் சதுர்த்தி கமிட்டி தலைவரும் பாஜக மாவட்ட பொருளாளருமான விநாயகம் தலைமை தாங்கினார். பாஜக தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் முன்னிலை வகித்தார். விழாவில் நெசவாளர் பிரிவு மாநில துணைத் தலைவர் உமாபதி, வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் ராஜேஸ்வரன், மருத்துவ பிரிவு மாநில செயலாளர் டாக்டர் பாரதி மோகன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட பார்வையாளர் தங்கதுரை, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம், தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் பொன்.மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ஹரிகரன், மற்றும் நிர்வாகிகள் முத்துராஜ், சந்தான லெட்சுமி, பூமி செல்வி, சுபா, உமாராணி, டாக்டர் ராமநாதன், கரம்பை சிவா, செந்தில் குமார், மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதிமுக மாநகராட்சி உறுப்பினர் கோபால் விநாயகருக்கு விஷேட பூஜைகள் செய்தார்.