தென்காசி மாவட்டம் தென்காசி நகர திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம்
தென்காசி செப்.08: தென்காசி நகர திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் தென்காசி கொடிமரத்திடலில் நேற்று (செப்.07) மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தென்காசி நகர கழக செயலாளரும் தென்காசி நகர்மன்ற தலைவருமான ஆர்.சாதிர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீ குமார், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன், தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நகர அவைத்தலைவர் பாலகிருஷ்ணன் (எ) கிட்டு, நகர பொருளாளர் சேக்பரீத், நகர துணை செயலாளர்கள் ராம்துரை, பால்ராஜ், சூரியகலா, மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், முகைதீன்பிச்சை, ரகுமத்துல்லா, சாகுல்ஹமீது, வார்டு பிரதிநிதிகள் ஜமால்லுதீன் (எ) பாபு, சேக்குலாசா, தங்கப்பாண்டி, கண்ணாடி சுலைமான், கழக முன்னோடி லியாகத்அலி, வார்டு செயலாளர் பால்துரை,¬ நகர தொண்டரணி அமைப்பாளர் நாகூர் மீரான், நகர சிறுபான்மை பிரிவு செய்யது ஆபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
24வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மகேஷ்வரி வரவேற்புரையாற்றினார் 24 வது வார்டு செயலாளர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜாகீர் உசேன் தொகுப்புரை வழங்கினார்
நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் இஸ்மாயில், வேங்கை சந்திரசேகர், ஆயிரப்பேரி முத்துவேல், மாவட்ட கழக அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், மாவட்ட கழக துணை செயலாளர் தமிழ்செல்வன், கென்னடி, கனிமொழி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, முத்துப்பாண்டி, சேசுராஜன், செக்தாவூது, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரஹீம், அருள், ராஜேஸ்வரன், ரவிச்சந்திரன், சாமித்துரை, சமுத்திரப்பாண்டி, கதிர்வேல்முருகன், தமிழ்செல்வி, தென்காசி மாவட்ட பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் உட்பட ஒன்றிய நகர கழக தலைவர்கள், செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், பேரூராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள், கழக வழக்கறிஞர்கள், தென்காசி நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு கழக பிரதிநிதிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், சார்பு அணி துணைஅமைப்பாளர்கள், நகர செயற்குழு உறுப்பினர்கள், நகர கழக முன்னோடிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி நகர திமுக சார்பில் செய்திருந்தினர். நிகழ்ச்சியின் முடிவில் 20வது வார்டு செயலாளர் அப்துல் ரசாக் நன்றி கூறினார்.
;