தென்காசி மாவட்டம்,
பழைய குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியில் ஐந்தாவது ஆண்டு விளையாட்டு விழா பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சென்னை வருவாய் புலனாய்வுத்துறை உதவி இயக்குனர் பிரபு அமல்ராஜ் மற்றும் தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படைத் தலைவர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இநத விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில் மாணவர்களுக்கு விளையாட்டு மிகவும் இன்றியமையாதது மற்றும் விளையாட்டின் மூலம் சிறந்த மனிதர்களை உருவாக்க முடியும் என்னறும் எனவே மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசினார்கள்.
அதனைத் தொடர்ந்து பழைய குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தொடர் ஓட்டம், ஓட்டப்பந்தயம், கராத்தே, யோகா, மனித பிரமிடு உள்ளிட்ட பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நான்கு அணிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சப்பயர் அணியினர் பெற்றனர்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் சென்னை வருவாய் புலனாய்வுத்துறை உதவி இயக்குனர் பிரபு அமல்ராஜ் மற்றும் தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படைத் தலைவர் பிரதாப் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் பள்ளியின் இயக்குனர் டாக்டர் ப்ராம்டன் ரத்னா பெல் வரவேற்று பேசினார். விழாவில் கலந்து கொண்ட பள்ளியின் தாளாளர் ஆர்.ஜே.வி பெல் மற்றும் செயலர் கிரேஸ் கஸ்தூரி பெல் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்களை வாழ்த்தினர். முடிவில் பழைய குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஆர்.ஜே.வி.பெல் அனைவருக்கும் நன்றி கூறினார்.