கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள புனித ஜான் பாஸ்கோ ஆலயத்தில் இயேசு கிறிஸ்துவின் தாயான அன்னை மரியாளின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அன்னை மரி பிறந்தநாள் விழா உலகெங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக ஜான் பாஸ்கோ ஆலயத்தில் மாதா திருவிழா கொண்டாடப்பட்டது. இதில்சிறப்பு பாடல் திருப்பள்ளிகளும் மற்றும் மாதாவின் சிறப்பினை விளக்கும் வகையில் உலகில் பல்வேறு பெயர்களில் உருவம் கொண்டிருக்கும்
40 விதமான மாதாவைப் போல் சிறுவர் சிறுமிகள் வேடமிட்டு வந்து விழாவினை சிறப்பித்தனர்.
திருவிழாவினைஅருட்பணி பெர்னாட் . அவர்கள் திருப்பலி ஆற்றி சிறப்பித்தார். அவருடன் அருள் சகோதரர். ஜான் பாஸ்கோ . அவர்களும் கலந்து கொண்டார்.
முன்னதாக ஜான் பாஸ்கர் ஆலயத்தில் உள்ள கிட்ஸ் மினிஸ்ரி சார்பில் ஒளியின் விதை என்ற மின் இதழ் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பாடல்போட்டிமற்றும் விவிலிய வினாடி வினா போட்டி நடைபெற்றது.இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருட்பணி கென்னடிஅவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
விழாவினை பங்கு மக்களும் மற்றும் அருகில் உள்ள பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.