கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஜிம்மி ஜார்ஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து 4 வது உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. உலக சிலம்ப சம்மேளனத் தலைவர் ஐரின் செல்வராஜ்,
சிலம்பம் சம்மேளன நிறுவனர் செல்வராஜ் ஆசான், மற்றும் சிங்கப்பூர், ஸ்ரீலங்கா தலைவர்கள் போட்டியை துவங்கி வைத்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை ஏராளமானோர் கலந்து கொண்டு கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்.
வெற்றி பெற்ற சிலம்பம் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிலம்ப போட்டி பிரீ சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் போன்ற பிரிவுகளில் 13 வகையான விளையாட்டுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் இந்தியா சார்பில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த கே.எஸ். ஹர்ஷன், எம். ஹரிஹரன், இ ஜோஷ்வா, எம்.ஆர். ரேஷ்மத், டி கே புவனேஸ்வரி, எம். ஹரி பாலாஜி ஆகிய 6 மாணவர்கள் கலந்துகொண்டனர் .
இதில் ஹரிஹரன் குத்து வரிசையில் தங்கப்பதக்கமும், ஆயுத கோர்வை ஜோடி தங்கப்பதக்கமும்,மான் கொம்பு – வெண்கலம் ஆயுத கோர்வை ஜோடி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
ஜோஷ்வா கம்பு சண்டை 55 எடை பிரிவில் தங்கப்பதக்கமும், கம்பு வீச்சில் வெண்கலம் பதக்கமும் பெற்றார்.ரேஷ்மத் ஒற்றை வாள் வீச்சில் வெள்ளிப்பதக்கமும்,
புவனேஷ்வரி கம்பு சண்டை 45 கிலோ எடை பிரிவில் வெண்கலம் பதக்கமும் , ஒற்றை வாள் வீச்சில் வெள்ளிப்பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர்.
ஹரிபாலாஜி கம்பு சண்டை 20கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வேல் கம்பு வீச்சில் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.மொத்தத்தில் அகில இந்திய அளவில் ராஜபாளையத்தில் வீரர்கள் வீராங்கனைகள் 4 தங்கம்,
3 வெள்ளி,4 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பயிற்சியாளர்கள் பாண்டியன் மற்றும் முருகன் ஆகியோர் முறைப்படுத்தினார்கள்.