செங்கோட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் – பொதுக்கூட்டம்–பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா பங்கேற்பு
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நகரின் முக்கிய இடங்களில் இருந்து சுமார் 38 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது
இந்த ஊர்வலத்தை பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச்.ராஜா துவக்கி வைத்தார். செங்கோட்டை வண்டி மலச்சி அம்மன் கோவில் முன்புள்ள திடலில் மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் கே சி ரோடு, வம்பளந்தான்முக்கு, வல்லம் ரோடு, செல்வவிநாயகர் கோவில் தெரு, எஸ் ஆர் கே தெரு, வழியாக சென்று தாலுகா அலுவலகம் ரோடு, மேலூர் முத்தழகி அம்மன் கோவில் தெரு, பம்ப் ஹவுஸ் ரோடு, சேர்வைக்காரன்புதுத்தெரு, காசுக் கடைபஜார், கீழ பஜார் வழியாக சென்று சிலைகள் அனைத்தும் குண்டாற்றில் நிஜர்சனம் செய்யப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு வீர விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் வன்னியராஜ் முன்னிலை வைத்தார். அதனைத்தொடர்ந்து ஐந்தருவி ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் சுவாமி நிர்மாலானந்தா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பாளர் சரவணன் கார்த்திக் பாஜக ஸ்டார்ட் மாநில தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச். ராஜா சிறப்புரை ஆற்றினார். முடிவில் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி பொருளாளர் முருகேசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
அதன்பின் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை தமிழ்நாடு
பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தென்காசி மாவட்ட பொதுச்செயலாளர் ராமநாதன்,
பாரதிராஜா கட்சி மாவட்ட துணை தலைவர் முத்துக்குமார் பால்ராஜ் செங்கோட்டை நகர தலைவர் வேம்புராஜ், ஓபிசி அணி மாவட்ட தலைவர் மாரியப்பன், மற்றும்
பாஜக, இந்து முன்னணி, உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீர விநாயகர் வழிபாட்டு கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்
செங்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு நெல்லை சரக டிஐஜி மூர்த்தி, தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன், ஏடிஎஸ்பி வேணுகோபால் ஆகியோர் தலைமையில் 800 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.