கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டியில் பேரூராட்சி மன்ற சாதாரண மாதாந்திர கூட்டம் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டியில் பேரூராட்சி மன்ற மாதாந்திர சாதாரண கூட்டம் அதன் தலைவர் சுந்தரி பாஸ்கரன் தலைமையில் செயல் அலுவலர் இளங்கோவன் துணைத் தலைவர் பசுபதி குமார் முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
கூட்டத்திற்குள் சென்ற பத்திரிகையாளர்களை உள்ளே வர அனுமதி இல்லை என்று அங்கு பணிபுரியும் பணியாளர் தடுத்து அடிக்க வந்தார் இது குறித்து தேனி மாவட்டசெய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி யிடம் தெரிவித்த பிறகு அதன் பிறகு செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்
பேரூராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தலைமையில் மன்ற மாதாந்திர கூட்டம் நடக்கும் போது படம் எடுப்பதற்கும் செய்திகள் போடுவதற்கும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகளுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது ஆனால் பத்திரிகையாளர்களை திருடன் போல் நினைத்து அங்கு பணிபுரியும் அலுவலர்கள் கூறி உள்ளே அனுமதிக்க மறுத்து பத்திரிக்கையாளர் அடிக்க வந்தது மன்ற கூட்ட அரங்கில் பரபரப்பாக கவுன்சிலர்கள் பேசினார்கள்.