தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்து வியாபாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் வி.பி ஜெயக்குமார் செய்தியாளரிடம் கூறியதாவது:-
இந்தியா சுதந்திரம் அடையும் போது இந்து மக்கள் ஏராளமான மக்கள் வாழ்ந்து வந்தனர். இப்போது இந்து மக்களுடைய மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திருப்பணிகள் நடைபெற்று வருவதாக கூறி வருகிறார். அவ்வாறு கூறுவது உண்மைக்கு மாறானது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் அடிப்படை வசதி கூட இல்லை. சங்கரன்கோவில் சங்கர நாராயண சாமி கோவில் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இந்த கடையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறுவது ஏற்க முடியாது.
இக்கோவிலில் அடிப்படை வசதி கூட இல்லை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் உள்ளூர் மக்கள் கொடுத்து வரும் உபயதாரர்களாலும், நன்கொடையாளர்களாலும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு கோவிலுக்கு நன்கொடை வழங்கும் உபயதாரர்கள் மற்றும் நன்கொடையாளர்களை கோவில் கும்பாபிஷேகத்தில் அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டாம். இந்துக்களாகிய எங்களுக்கும் தான் ஸ்டாலின் முதலமைச்சர். எனவே தமிழக முதல்வராக இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும்.
இவ்வாறு வி.பி. ஜெயக்குமார் கூறினார்.
அப்போது நெல்லை இந்து முன்னணி கோட்டச் செயலாளர் ஆறுமுகச்சாமி, தென்காசி மாவட்ட பாஜக வர்த்தக சங்கத் தலைவர் ராஜா, செங்குந்தர் சமுதாயப் பிரமுகர் மாரிமுத்து உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.