அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் லோடிங் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கொடி ஏற்று விழா பெயர் பலகை திறப்பு விழா தோழர் என்.பி தென்னரசு கிளைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது இதில் சங்க கொடியினை மூத்த தோழர் சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஆர் சிற்றம்பலம் ஏற்றி வைத்தார்
பெயர் பலகையை மாவட்ட தலைவர் கே கிருஷ்ணன் திறந்து வைத்தார் சங்கத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்ட செயலாளர் பி துரைசாமி நிறைவுறையாற்றினார்
இதில் சங்கத்தின் தலைவர் கணேசன் பொருளாளர் முரளி துணைத் தலைவர்கள் ஆர் ராஜா எஸ் பூமிபாலன் ஆர் குணசீலன் கே தர்மராஜ் கிளைச் துணை செயலாளர்கள் சி குமரவேல் கே ஆனந்த கருணாமூர்த்தி சீ சின்னத்துரை தேசிங்கு ராஜ் மற்றும் ஏராளமான தொழிலாளர் தோழர்கள் கலந்து கொண்டனர்
நிறைவாக தோழர் அருண்பாண்டியன் சுரங்க தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அவர்களின் நன்றியுடன் இனிதே கொடியேற்று விழா நிறைவுற்றது