தேனி புதிய பஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று கூட்ட நெரிசலில் தேனி நகரில் சோலைமலை நிர்வாகத்தை சேர்ந்த தனியார் பேருந்து காலையில் கம்பத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற பொழுது அப்ப பேருந்தில் பயணித்த கல்லூரியில் படிக்கின்ற பெண்கள் தனது கைபேசியை இரண்டையும் பஸ்ஸில் தவற விட்டார்கள் இது குறித்து அந்த பெண்கள் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து தேனி காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி உடனடியாக நடவடிக்கை எடுத்து தேனி புதிய பேருந்து நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காவலர் பால்பாண்டியிடம் கூறி உடனடியாக தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து அப்ப பேருந்தில் இருந்த இரண்டு செல்போன்களும் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புகார் கொடுத்து ஒரு சில மணி நேரத்தில் செல்போனை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் இந்த சேவை தொடர வேண்டும் என மனதார வாழ்த்தினார்கள்