சித்தாமூர் மேற்கு ஒன்றியம்
அதிமுக கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை.

செங்கல்பட்டு மாவட்டம்
சித்தாமூர் மேற்கு ஒன்றியம் பொலம்பாக்கம் ஊராட்சியில் கழக உறுப்பினர்களுக்கு
அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர்
ஒன்றிய உறுப்பினருமான பொலம்பாக்கம் வழக்கறிஞர்
எம்.குணசேகரன் ஏற்பாட்டில் செங்கல்பட்டு
கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கி பொலம்பாக்கம் கிளையில் அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

மேலும் விடியா திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது. இந்த திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் கொலை கொள்ளை கற்பழிப்பு என குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது மட்டுமின்றி பள்ளி மாணவ மாணவிகளுடைய போதை வஸ்துக்கள் அதிகமான கலாச்சாரம் உருவாகி உள்ளது.

இதைக் கண்டு கொள்ளாத திமுக அரசு அதே போன்று அத்தியாவசிய பொருட்களின் விலையும் மூன்று
மடங்கு உயர்ந்துள்ளது.

மேலும் இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் அதனால் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக அரசை வெளியேற்ற வேண்டும் என கழக நிர்வாகிகள் இடையே கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம்,மாவட்ட துணை செயலாளர்
எஸ்வந்த்ராவ்,காஞ்சிபுரம் மண்டல
தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ராஜசேகர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவராகமூர்த்தி,மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பு,
மாவட்ட விவசாய அணி பிரிவு துணைச் செயலாளர் பூபதி,எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர்
சோத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான மா.ஸ்ரீதர்,பி.ஏ.தண்டபாணி,உட்பட கிளை செயலாளர்கள்
ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள்
என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *