போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும்( ரி சஸ்டநேபிலிட்டி சொல்யூஷன் லிமிடெட்) என்ற வேஸ்டேஜ் கம்பெனியை மூடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட போச்சம்பள்ளி சிப்காட்டில் இயங்கி வரும் வேஸ்டேஜ் கம்பெனியை மூடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட பாமக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்பெனியில் மறுசுழற்சி செய்யப்படும் மருத்துவ கழிவுகள் (நோய்வாய்ப்பட்ட மனித உடல் பாகங்கள் மனித உடல் காலாவதியான மருந்துகள்) பயன்படுத்தப்பட்ட மருந்து பாட்டில் மருத்துவ கழிவுகளை இருப்பதால் ஏற்படும் புகையினால் சுற்றியுள்ள மக்களுக்கு மற்றும் உயிர்களுக்கு சுவாச கோளாறு நுரையீரல் பாதிப்பு வருகிறது

ரீ வேஸ்ட் என்ற பெயரில் நிலத்துக்கு அடியில் 200 வருடங்கள் மூடி வைப்பதால் நமது குடிநீர் குடிக்க பயனற்றதாக மாறும் இதனால் சிறுநீரகங்கள் இதயம் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் பெரியவர்களுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் ஆடு மாடுகளுக்கும் இந்த ஆபத்து வரும்

மேலும் ஆசிட் வேஷ்டிகளை திறந்தவெளியில் காய வைக்கிறார்கள் இதனால் புற்றுநோய் வாந்தி மயக்கம் தலைச்சுற்றல் போன்ற சுவாசக் கோளாறுகள் ஏற்பட நேரிடும் என்று பல்வேறு கோஷங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *