கூடலூரில் நடை பயிற்சிக்கு இடையே மக்களின் குறையை கேட்ட மனு வாங்கிய தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி 21 வது வார்டு பகுதியான பழங்குடியின மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியான குடியிருப்பு பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது பழங்குடியின மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு சென்று அங்கு வாழும் மலைவாழ் மக்களிடம் உங்களுக்கு குடிநீர் தெரு விளக்கு சாக்கடை கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்பதை எம்பியிடம் தெரிவித்ததை யடுத்து உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்துகிறேன் என்று என்று உறுதி அளித்தார்.
மேலும் அங்கு பழங்குடியின மக்களுக்கு பல்வேறு பெட்ஷீட் போர்வை போன்ற அடிப்படை பொருட்களை தனது சொந்த நிதியிலிருந்து சுமார் 2000 குடும்பங்களுக்கு வழங்கினார் மேலும் அவர் கூறும் போது நான் ராஜ்யசபா எம்பி ஆக இருந்தபோது என்னுடைய ராஜ்யசபா நிதியிலிருந்து இந்தப் பகுதியில் பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்காக தொடக்கப்பள்ளி கட் டி அதனை திறந்து வைத்தேன் தற்போது தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் மு க ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை அந்தப் பள்ளியில் தொடங்கி வைத்திருந்தார்
அந்த பள்ளிக்கு நேரடியாக சென்று காலை உணவு குழந்தைகளுக்கு தரமாக வழங்கப்படுகிறதா என்பதை அவர் குழந்தைகளோடு அமர்ந்து அந்த உணவை சாப்பிட்டு பார்த்து இதைவிட மிகவும் நல்ல முறையில் உணவு குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என அங்குள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அந்த விடுதியில் உள்ள குழந்தைகளுக்கு சரியான குடிநீர் கிடைப்பதில்லை என்பதையும் விடுதி காப்பாளர் தினமும் சாயங்காலம் 5 மணிக்கு சென்று விட்டு மறுநாள் காலை10 மணிக்கு தான் வருவார் விசேஷம் மற்றும் சனி ஞாயிறு சில நாட்களில் விடுதிக்கு வருவதில்லை என்பதை குழந்தைகள் எம் பி யிடம் தெரிவித்தனர்
இது குறித்து இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் தேனி பாராளுமன்ற தொகுதி எம்பி நடை பயணத்தில் கூட மக்களின் குறைகளை கேட்டு மனுவாகவும் பெற்று சென்றதை இந்த நல்ல சேவையை பழங்குடியின மக்கள் மனதார பாராட்டினார்கள்.