திருவள்ளூர்
காணியம்பாக்கம் ஊராட்சியில் பட்டியலின விவசாயிகளுக்கு கோடுவெளி,அலமாதி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் தீவனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காணியம்பாக்கம் ஊராட்சியில்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உணவு மற்றும் பால் வளர்ப்பு தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் கால்நடை வளர்ப்பின் மூலம் தமிழக ஆதிதிராவிட விவசாயிக ளின் சமூக பொருளாதார மேம் பாட்டு திட்டத்தின் கீழ் புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நிதி உதவிகளை காணியம் பாக்கம் ஊராட்சியில் வசிக்கும் ஆதிதிராவிட விவசாயி கள் வைத் திருக்கும் கறவை மாடு களுக்கு மற்றும் ஆடுகளுக்கும் உணவு தீவனங்கள் மருந்து மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இந் நிகழ்ச்சிக்கு கோடுவெளி அலமாதி பகுதியிலுள்ள தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவி யல் பல்கலைக்கழக உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ந.குமரவேலு தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் காணியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மொழிப்போர் தியாகி டாக்டர் கா.சு ஜெகதீசன்,மருத்துவர் கீதா,மருத்துவர் பேராசிரியர், பூங்மேடு புனிதபுரி ஸ்ரீமான் நாராயண பிருந்தாவன ஆசிரம உ.வே.சுதர்சனசரியர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பின்னர் ஆடு மாடுகளுக்கான தீவனங்கள், நுன் சத்து திரவ மருந்து, நுன் சத்து கலவை, தாது உப்பு கட்டி, பயிற்சி கையேடு ஆகியன வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆடு மாடுகளை எவ் வாறு அறிவியல் ரீதியாக வளர்க்க வேண்டும் என்ற செயல் முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் ஏராளமான ஆதிதிராவிட விவசாயிகள் கலந்து கொண்ட னர்.
அதன்படி இதன் மூலம் நூற்றுக் கணக்கான ஆதி திராவிடர் கால் நடை வளர்ப்பு பயனாளிகள் பயன டைந்தனர்.