செங்குன்றம் செய்தியாளர்
ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டை தாலுகா ஸ்ரீஹரிகோட்டா அருகில் உள்ள வேணாடு தர்கா மிக பிரசித்தி பெற்றதாகும்
600 ஆண்டுகளுக்கு மேலாக மிக பழமை வாய்ந்த இந்த தர்காவில் சேக்தாவுத் (ரலி) என்ற ஞானி பல பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இருபுறமும் கடல் சூழ்ந்த இடத்தில் ஒருபுறம் ஷேக் தாவூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களுடைய தங்கை வகிதா பிபி( ரலி ) அவர்களும் மற்றொரு புறத்தில் அவருடைய தம்பி ஷேக் ஜமாலுதீன் ஷா ரலியல்லாஹு ஆகியோர்கள் அடங்கப்பட்டு அங்கே பக்தர்களுக்காக பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
மேலும் அமாவாசை அன்று மூச்சுவிடும் தர்காவாக அமைந்துள்ளதால் ஏராளமான பக்தர்கள் அது சமயம் வந்து அருளை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த தர்காவில் 29 வது சந்தனக்கூடு விழா நிர்வாகிகளின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சூலூர் பேட்டை தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் விஜயலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்
இதில் வழக்கறிஞர் சுதர்சனம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முன்னதாக சந்தனக்கூடு ஊர்வலமானது அந்த ஊரின் மையப் பகுதியில் சுற்றியுள்ள தெருக்களில் வலம் வந்து பின்னர் தர்காவுக்கு வந்தடைந்தது
இதில் வேனாடு கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு ஜாதி மதம் பார்க்காமல் சீர்வரிசை தட்டுகளோடு வந்திருந்தனர் இறுதியில் இஸ்லாமிய இன்னிசை கவ்வாலி கச்சேரி மற்றும் இறை பக்தி ஓதுதல் சந்தனம் பூசுதல் ஆகியவை நடைபெற்றது.