கூடலூர் நகரில் நகராட்சி ஆணையர் வாசுதேவன் பொறுப்பு உத்தரவுப்படி சுகாதார ஆய்வாளர் விவேக் அறிவழகன் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய நகரமாகும் கேரளா எல்லை வரை கூடலூர் நகராட்சி 21வது வார்டாக உள்ளது தமிழகம்
கேரளாவை இணைக்கும் மாநிலம் என்பதால் கேரளாவில் இருந்து தினமும் பல்லாயிரம் பேர் வந்து செல்வதாலும் அங்கிருந்து வரும் பொது மக்களால் இங்கு வசிக்கும் பொது மக்களுக்கு பல்வேறு நோய்கள் மட்டும் இல்லாமல் குறிப்பாக காய்ச்சல் இருமல் டெங்கு காய்ச்சல்   போன்ற நோய்கள் கேரளாவில் பெய்து வரும் கனமழையாலும் சீதோஷ்ண நிலை காரணமாகவும் தட்பவெட்பநிலை மாற்றத்தாலும்  தற்பொழுது கேரளாவில் வேகமாக பரவி வரும் குரங்கம்மமை நோய் தமிழக பகுதிகளான கூடலூர் நகராட்சி மக்களுக்கு வராமல் தடுக்கும் விதமாகவும் பொது மக்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை தடுக்கும் விதமாக நகரில் உள்ள 21 வார்டுகளிலும் தெருத் தெருவாக குழுவாக சென்று வீடு வீடாக வீடு சமையலறையை தவிர்த்து கழிப்பறை படுக்கையறை போன்ற இடங்களில் வீட்டுக்குள்ளே வந்து குறிப்பாக யாரும் படுத்தியிருந்தால் அவர்களை எழுப்பச் சொல்லி கொசு மருந்து அடிப்பதால் குடியிருக்கும் மக்களுக்கு நோய் பரவாமல் தடுக்கும் விதமாக கொசு மருந்து அடிப்பதில் டெங்கு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டெங்கு பணியாளர்கள் கூறும்போது கொசு மருந்து அடிக்க வரும்போது வீடுகளை திறந்து விட்டு ஒத்துழைப்பு தர வேண்டும் கொசு மருந்து அடிப்பது உங்கள் நலனுக்காக என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றனர்

மேலும் தண்ணீர் தேங்கியுள்ள வீடுகளில் புழுக்கள் உள்ளதா என்று ஆய்வு செய்ய வரும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி குடிநீரை சுத்தமாக வைத்து நோய் பரவல் தடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் இந்த பணியை செய்வது என்பது கூடலூர் நகராட்சி மக்கள் சுகாதாரமான முறையில் தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கும் விதமாக நல்ல எண்ணத்துடன் செய்யும் நகராட்சி அதிகாரிகளுக்கு மற்றும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் மேலும் ஒரு முறை தண்ணீரில் புழுக்கள் உள்ளதை பார்த்து அதை அளித்து விட்டு வரும் பணியாளர்கள் மீண்டும் அதே வீட்டில் தண்ணீரில் தேக்கி வைத்து அதில் புழுக்கள் இருந்தால் நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் இந்த பணியை
செய்வது நகராட்சி பகுதியில் வாழும் மக்களுக்கு எந்தவித நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று நல்ல எண்ணத்துடன் செயல்படும் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் உத்தரவுபடி சுகாதார அலுவலர் விவேக் அறிவழகன் தலைமையில் சுகாதார பணிகள் செய்து வருவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது நகராட்சி அதிகாரிகளின் கோரிக்கையாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *