எந்த நலத்திட்டமும் சென்று சேராத ஏனாதி கிராம மக்கள்!! முதல்வர் பார்வைக்கு செல்லுமா பொதுமக்கள் கோரிக்கை!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி, இளையான்குடி தாலுக்கா வாணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏனாதி கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர், இவர்களுக்கு அரசு வழங்கும் எந்த நல திட்டமும் இவர்களுக்கு சென்று சேர்வதே இல்லை என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர், மேலும் அரசு வழங்கி வரும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்துள்ளது
ஒரு வருட காலமாக!! கடந்த 6 மாதங்களுக்கு முன் இளையான்குடி வட்டாட்சியர் மூலம் எழுதி செல்லப்பட்டு வரை எந்த நடவடிக்கையும் இல்லை, கூலி வேலைக்கு செல்லும் இப் பெண்கள் நிலை அரசு அதிகாரிகளின் பார்வைக்கு செல்லவில்லயா பல முறை அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தும், குறிப்பாக மக்கள் முதல்வர் முகாமில் 2,3 முறை மனு கொடுத்தும் இன்று வரை எந்த ஒரு பதிலும் இல்லை என்று கூறுகிறார்கள் இப்பகுதி பெண்கள், இதன் மூலமாவது எங்கள் கோரிக்கை முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு செல்லவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்,….