சந்தப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக புதிய உறுப்பினர் அட்டையை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் சந்தப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான கோட்ரப்பட்டி, நாச்சினாம்பட்டி,மூக்கனூர்ப்பட்டி, சூரப்பட்டி,பகுதிகளிள் கடத்தூர் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் மதிவாணன் ஏற்பாட்டில்,அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அதிமுக புதிய உறுப்பினர் அட்டைகளை தொண்டர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர்கள் துரைசாமி,சண்முகம் காமராசு காவேரி ராமசாமி முத்துராஜ் சேகர் சங்கர் அன்பு பார்த்திபன்,சக்கீலா அரசு,அழகு,குமரேசன்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்