விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் ரோட்ராக்ட் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. டாக்டர் என்.கார்த்திகேயன் ரோட்டரி வணக்கம் செலுத்தினார். ராஜபாளையம் ரோட்டரி தலைவர் இரா. ஆனந்தி துவக்க உரையாற்றினார்.
தலைவராக எஸ்.வி. அபிநயஸ்ரீ தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அதேபோன்று ரோட் ட்ராக்டர் தலைவராக எம்.ஆதீஷ் தேர்வு செய்யப்பட்டு அவருக்கும் பதவி ஏற்பு செய்யப்பட்டது. விழாவில் மாவட்ட சேர்மன் குருசாமி, மாவட்ட கான்பரன்ஸ் சேர்மன் சண்முக நடராஜ், மாவட்ட ரோட்ராக்ட் சேர்மன் பேராசிரியர் அருணேஷ் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் ரோட் டிராக்டர் எம்.ஆதீஷ் நன்றி கூறினார். ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றனர்.