சி கே ராஜன் 9488471235
கடலூர் மாவட்ட செய்தியாளர்..
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகமும் செய்தி மக்கள் தொடர்பு துறையும் இணைந்து அமைக்கப்பட்டிருக்கும் அரசுப் பொருட்காட்சியின் அரங்குகளை அமைச்சர் பெருமக்கள் துவக்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார், தகவல்
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அரசுப் பொருட்காட்சியின் அரங்குகளை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் , மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முன்னிலையில் 13.09.2024 (வெள்ளிக்கிழமை) அன்று துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேரூரையாற்ற உள்ளார்கள்.