சங்கரன்கோவில், செப். 11-தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாஜக சார்பில் இமானுவேல் சேகரன் நினைவேந்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு இருந்த இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் பாஜக நகர தலைவர் கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ் தேவேந்திரன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜா, பிரச்சார அணி தலைவர் ரவிப்பாண்டியன், ஆன்மிக பிரிவு தலைவர் செந்தில்குமார், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவர் பெரியசாமி, நகர துணை தலைவர்கள் சண்முகையா, சுப்பிரமணியன், நிர்வாகி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.