செங்குன்றம் செய்தியாளர்
புழல் அடுத்த விநாயகபுரம் , கல்பாளையம் அண்ணா தெருவில் அமைந்துள்ள அருள்மிகு நூக்காளத்தம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதலாவதாக பிள்ளையார் வழிபாடு ,லஷ்மி வழிபாடு மற்றும் காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் மூத்த பிள்ளையார் முதல் வேள்வி, திருமகள் வழிபாடு நவகோல் நல்விண்ணப்பம் , மண்எடுத்து பூசித்தல், கோபூஜை புதிய மூர்த்திங்கள் உட்பட பல பூஜைகள் நடைபெற்று மங்கலநாதரஸ்வர இசையோடு திருப்பள்ளியெழுச்சி நடைபெற்றது.
இதில் இரண்டாம் காலவேள்வி திரவியாகுதி, மகாயாத்ரா தானம் ,நாடி சந்தானம் , திருக்குடத்தில் இறைவிதிருவுலா , கருவறை விமானம் மகாகும்பாபிஷேகம் மகா அபிஷேக அலங்காரம் நடைபெற்று மகாதீப ஆராதனையோடு புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது .
அதன்பின் பல்வேறு நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் பக்த கோடிகள் அனைவருக்கும் தெளிக்கப்பட்டு அம்மனின் அருளை பெற்று சென்றனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.