தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் இன்று பகுதி சபா கூட்டம் நடைபெற்றது அதன்படி மாநகராட்சியில் உள்ள 44 வது வார்டு பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். உங்கள் குறைகளை விரைவில் சரி செய்யப்படும் என்று அங்கு இருந்த பொதுமக்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்தார் நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணைய மதுபாலன் உதவி ஆணையர் பொறுப்பு மகேந்திரன் மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்