பேரறிஞர் அண்ணா அவர்களின் 116-வது பிறந்தநாள் விழா பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்தின் சார்பில்
இன்று ஞாயிறுக்கிழமை காலை(15-09-2024)சுமார் 9:00 மணியளவில் பையர்நத்தம் பேருந்து நிறுத்தத்தில் ஒன்றிய கழக செயலாளர் பி.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில்
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அவர்களும்,
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களும் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.முத்துக்குமார்,ஊராட்சிமன்ற தலைவர்கள் சாந்தாகுப்புசாமி,திருமலாதினேஷ்,ஜெயகுமார் மற்றும் கிளைக்கழக செயலாளர்கள் பூக்கார வெங்கடேசன்,வா.விஜயன்,செந்தூரன்,வெங்கடேசன் ,ஓ.சின்னு,செல்வம்,மன்னன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.